1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ricky ponting came back to stadium after treatment

ஒரு நாள் சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் மைதானத்துக்கு திரும்பிய ரிக்கி பாண்டிங்!

ரிக்கி பாண்டிங்
ஆஸி அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங், இப்போது சில லீக் அணிகளுக்கு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

இப்போது ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு கொண்டிருந்த அவர் திடீரென நெஞ்சு வலிக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஒருநாள் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு ரிக்கி பாண்டிங் மீண்டும் தற்போது போட்டி நடந்த மைதானத்துக்கு வந்து போட்டியை தொகுத்து வழங்கினார். அவர் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
About Writer
vinoth