திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 18 அக்டோபர் 2023 (07:24 IST)

உலகக் கோப்பையில் இந்திய அணியை தோற்கடிப்பது கஷ்டம்… காரணம் சொல்லும் ரிக்கி பாண்டிங்!

இந்திய அணி நடந்து வரும் உலகக் கோப்பை தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளோடு மோதி மூன்று போட்டிகளையும் வென்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “இந்திய அணியை உலகக் கோப்பை தொடரில் வெல்வது கஷ்டம். வேகப்பந்து வீச்சு, சுழல்பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என அனைத்தும் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்திய அணியின் சாதக அம்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா இருக்கிறார். அவர் களத்துக்கு உள்ளேயேயும் வெளியேயும் விஷயங்களை பதற்றமின்றி செய்கிறார்.” எனப் பாராட்டியுள்ளார்.

இந்திய அணி நாளை தனது நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.