ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (15:49 IST)

பிரபல வீரருக்கு ரெட் கார்டு... ரசிகர்கள் அதிர்ச்சி !!

உலகக கால்பந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இந்த நூற்றாண்டின் வீரர். மெஸ்ஸி. இன்று அவருக்கு மைதானத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸிக்கும் உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். அவர் கால்பந்தாட்டத்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்ட்டியானோ ரொனால்டுக்கு இணையானராகவும் சகப் போட்டியாளராகவும் கருதப்படுகிறார்.

இந்நிலையில் எப்போதும் மைதானத்தில் அமைதியான முறையில் விளையாடி வரும் பார்சிலோனா அணியைச் சேர்ந்த மெஸ்ஸி இன்று ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் எதிரணி வீரர் வில்லியம்ஸைக் கீழே தள்ளியதால் நடுவரால் ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.