1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (15:06 IST)

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

IPL Match
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற சென்னை பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஜியோ சினிமாவில் மொத்தம் 50 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 68ஆவது லீக் ஆட்டம் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 
 
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை சென்னை அணி இழந்தது. 

இந்த நிலையில்  இந்தப் போட்டியை ஜியோ சினிமாவில் 50 கோடி பேர் பார்த்துள்ளனர். இது சாதனை நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், சென்னை அணி தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.