தொடர்புடைய செய்திகள்
- கடசில நாங்கதான் ஐபிஎல் கோப்பையை வாங்கிக் கொடுக்கனும் போல… ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற்ற மகளிர் RCB அணி!
- மகளிர் ஐபிஎல்: குஜராத் அணிக்கு 2வது வெற்றி.. உபியை வீழ்த்தியது..!
- கடும் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் பெங்களூர்… ஆர் சி பி போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறதா?
- மகளிர் ஐபிஎல்: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி..!
- மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்.. குஜராத் அணிக்கு முதல் வெற்றி.. பெங்களூரை வீழ்த்தியது..!
ஆர் சி பி அணியில் நடந்த மாற்றம்… கண்ணாடி திருப்புனா வண்டி ஓடுமா மொமண்ட்- ரசிகர்கள் ஜாலி கேலி!
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இது அந்த அணியின் மேல் ஒரு கரும்புள்ளியாகவே உள்ளது.
இதுவரை அந்த அணி மூன்று முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதிலும் கடைசி 7 ஆண்டுகளில் ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டாவது அந்த அணி கோப்பையை வெல்லவேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஆர் சி பி அணியில் தற்போது மாற்றம் ஒன்றை அணி நிர்வாகம் செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை ராயல் சேலஞ்சர் பெங்களூரு என்று பெயரை மாற்றியுள்ளனர். இது சம்மந்தமான அறிவிப்பு வெளியானது சமூகவலைதளத்தில் ரசிகர்கள் அணி நிர்வாகத்தைக் கிண்டலடிக்க தொடங்கியுள்ளனர்.