திங்கள், 12 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 13 மார்ச் 2024 (10:07 IST)

கடசில நாங்கதான் ஐபிஎல் கோப்பையை வாங்கிக் கொடுக்கனும் போல… ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற்ற மகளிர் RCB அணி!

கடசில நாங்கதான் ஐபிஎல் கோப்பையை வாங்கிக் கொடுக்கனும் போல… ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற்ற மகளிர் RCB அணி!
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இது அந்த அணியின் மேல் ஒரு கரும்புள்ளியாகவே உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மகளிர் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ஆர் சி பி அணி நம்பிக்கை அளிக்கும் விதமாக கலக்கி வருகிறது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய அந்த அணி நேற்று மும்பையை எதிர்கொண்டு அந்த போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர் சி பி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஸ்ருதி மந்தனா தலைமையில் விளையாடி வரும் ஆர் சி பி அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன