ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 15 மே 2023 (07:47 IST)

ரன்ரேட்டில் அசுர பாய்ச்சல்… ப்ளே ஆஃப் கனவை வலுவாக்கிய ஆர் சி பி!

ஐபிஎல் லீக் போட்டிகளின் பரபரப்பான இறுதி கட்டத்தில் நேற்று நண்பகல் போட்டியில் ஆர்சிபி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் நடைபெறும் போட்டி வாழ்வா? சாவா? போட்டியில் ஆர் சி பி அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆர் சி பி அணி, 171 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பரிதாபகரமாக விக்கெட்களை இழந்து 59 ரன்கள் மட்டுமே சேர்த்தது. மிகப்பெரிய மார்ஜினில் வெற்றியைப் பதிவு செய்த ஆர் சி பி நெட் ரன்ரேட்டில் அசுரப் பாய்ச்சல் பாய்ந்து இப்போது புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் அந்த அணியின் ப்ளே ஆஃப் கனவு வலுவாகியுள்ளது.