1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ravi shastri talked about kohli aggression as hot cat

கோலி எப்போதும் சூடாகவே இருப்பார்… ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்!

விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீரென கடந்த ஏப்ரல் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  ஏற்கனவே அவர் டி 20 போட்டிகளில் இருந்தும் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்துவிட்டதால் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இம்மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான்கு மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் களத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறார். 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் வரை அவர் கண்டிப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோலியும் நண்பரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கோலியின் ஆக்ரோஷம் பற்றி பேசியுள்ளார். அதில் “கோலி கேப்டனாக இருக்கும்போது எப்போதும் சூடாக இருப்பார். ஒரு வீரர் அவுட்டானால் உடனே இருக்கையில் இருந்து எழுந்துவிடுவார். நான் அவரை அமைதிப்படுத்தி அவுட்டான பேட்ஸ்மேன் பாதி தூரம் வந்தபிறகு நீ செல்லலாம் என்பேன். அந்தளவுக்கு சூடான கூரை மேல் நிற்கிற பூனை போலவே இருப்பார்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!