தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!
- அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?
- இந்தியாவில் தயாரான 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: WHO எச்சரிக்கை
- எதிர்காலத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! - டொனால்டு ட்ரம்ப்!
- இந்தியாவின் முதல் மெகா செயற்கை நுண்ணறிவு மையம்.. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு..!
ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இம்மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றிருந்தாலும் அவரின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு சுப்மன் கில் புதியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் விளையாடுவது உறுதியில்லை என்பதால் புதிய அணியை உருவாக்கும் விதமாக கேப்டன்சி மாற்றப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஆஸ்திரேலியா தொடருக்காகத் தற்போது புறப்பட்டுள்ளது.
இதற்காக லண்டனில் இருந்து நான்கு மாதங்கள் கழித்து இந்தியா வந்த விராட் கோலி அணியினருடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் தொடருக்காக கோலி மற்றும் ரோஹித் செல்வது இதுவே கடைசி முறையாக இருக்கும் என்பதால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்