1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

மஞ்சள் கூட்டமாக தெரிந்த ஈடன் கார்டன்ஸ் மைதானம்… தோனி சொன்ன ப்ளாஷ்பேக்!

2023ம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த சீசன் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய தோனி ”நான் டிக்கெட் கலெக்டராக வேலை செய்த கரக்பூர் ரயில்வே நிலையம் இங்கிருந்து 2 மணிநேர பயணம்தான். அந்த பந்தம் இன்னும் தொடர்வதாக நினைக்கிறேன். உங்கள் அன்பிறகு நன்றி” எனக் கூறினார். நேற்று கொல்கத்தாவில் போட்டி நடந்தாலும், ரசிகர்கள் சி எஸ் கேவின் மஞ்சள் ஜெர்ஸி அணிந்து வந்து பெருந்திரளாக சென்னை அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.