1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 24 ஏப்ரல் 2023 (08:11 IST)

’தல” ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க..! – தோனியின் முடிவால் கலங்கி நிற்கும் ரசிகர்கள்!

Thala Dhoni
நேற்றைய கொல்கத்தாவுடனான போட்டியில் சென்னை வென்றதை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் கேப்டன் தோனி அளித்த பேட்டி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் ஆட்டங்கள் தூள் பறக்கிறது. இதுவரை 7 போட்டிகளில் 5 போட்டிகளை வென்றுள்ள சிஎஸ்கே தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு முறை சிஎஸ்கே விளையாடும்போது அனைத்து அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஒன்றுதான். ‘தோனி இறங்கி ஒரு சிக்ஸராவது அடிக்க வேண்டும்” என்பதுதான் அது.

ஒவ்வொரு முறை ஜடேஜா விக்கெட் விழும்போதும் அடுத்து தோனியின் வருகைக்காக ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கி விடுவர். ஆனால் சமீப காலமாக தோனி அளித்து வரும் பேட்டிகள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன. இந்த சீசன் தான் தோனி விளையாடும் கடைசி சீசன் என பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தோனியும் அடிக்கடி பேட்டிகளில் சில வார்த்தைகளை விட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார். நேற்று நடந்த போட்டிக்கு பின் பேசிய தோனி “ஈடன் கார்டன் முழுவதும் மஞ்சள் ஜெர்சியால் நிறைந்திருக்கிறது. எனக்கு ஃபேர்வெல் அளிப்பதற்காக ரசிகர்கள் இப்படி மஞ்சள் ஜெர்சியில் வந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். ரசிகர்கள் ஆதரவுக்கு நன்றி. இதில் பலரும் அடுத்த போட்டியில் கொல்கத்தா ஜெர்சி அணிந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க போகிறார்கள்” என பேசியுள்ளார்.

இது ஐபிஎல்லில் தனது கடைசி சீசன் என்பதால் சிஎஸ்கேவுக்கு கோப்பையை வென்று தர வேண்டும் என தோனி தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்றும் கூறப்படும் நிலையில் தோனியின் இந்த சூசகமான பேச்சு ரசிகர்களை கலங்க செய்துள்ளது.

Edit by Prasanth.K