திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (09:14 IST)

பெண்களுக்கு மருத்துவ கல்வி மறுப்பு… தாலிபன் அரசை ரஷீத் கான் விமர்சனம்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் உயர்கல்வியைப் படிக்கக்கூடாது, பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது போன்ற விதிகள் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் பெண்கள் ஒரு குழுவாக தொழுகை நடத்தும்போது அதில் ஒரு பெண் மட்டும் சத்தமாக குர்ஆனை ஓதக்கூடாது என்றும் ஒரே மாதிரி குரலில் தான் குர்ஆனை ஓத வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது பெண்கள் மருத்துவம் மற்றும் செவிலியர் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் படிப்பதற்கும் தடை விதித்துள்ளனர். இது ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய பெண்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் “கல்வியின் முக்கியத்துவத்தை குர் ஆன் வலியுறுத்துகிறது.  பெண்கள் தங்கள் கல்வியின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும்.  அனைவருக்கும் கல்வியை வழங்குவது என்பது ஒரு தார்மீகக் கடமை. அதனால் இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.