வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (14:29 IST)

ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டி… விக்கெட்களை இழந்து தடுமாறும் தமிழக அணி!

கடந்த சில மாதங்களாக ரஞ்சித் கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில்  தற்போது நாக் அவுட் சுற்றுகள் நடந்து வருகின்றன. தமிழக அணி இதில் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தற்போது வரை 6 விக்கெட்களை இழந்து 91 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர். மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே அதிகபட்சமாக மூன்று விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.