1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (11:52 IST)

50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..! போதை கலாச்சாரமாக மாறும் தமிழகம்.!!

drugs
மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னையை சேர்ந்த பயணியிடம் 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன்   போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் போதை பொருள் கடத்தலை தடுக்க  போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார்‌ தீவிர கண்கானிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை  ( DIRECTOR REVENUE INTELLGENGE ) அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 
 
சென்னையில இருந்து  - செங்கோட்டைக்கு  புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பேக்குடன் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ்(42)  ஏறினார். அதிகாரிகளும் ரயிலில் பின் தொடர்ந்தனர். 
 
Drug Arrest
மதுரை ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் மடக்கி பிடித்து இரண்டு போக்கையும் சோதனை செய்ததில் அதில் போதைபொருள் 10 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலான என 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. 

உடனே (DIR) DIRECTOR REVENUE INTELLGENGE அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரயில் நிலைய காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு 50 கோடி ரூபாய் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. 

சமீபகாலமாக தமிழகத்தில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.