செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (11:37 IST)

தொடங்கியது தேர்தல் ஏற்பாடுகள்.! துணை ராணுவ வீரர்கள் இன்று தமிழகம் வருகை..!!

மக்களவைத் தேர்தலையொட்டி  15 கம்பெனி துணை ராணுவப்படையினர் இன்று தமிழகம் வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது. தற்கான ஏற்பாடுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
 
தேர்தலையொட்டி அனைத்து மாநில கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டார்.
 
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பது குறித்தும், தேர்தலுக்கான பாதுகாப்பு பணி குறித்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கமாக கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தேர்தல் பணிக்காக 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் இன்று தமிழகம் வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மார்ச் 7-ம்தேதி 10 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகின்றனர் என்றும் ஒரு கம்பெனியில் 90 வீரர்கள் இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட  200 கம்பெனி பாதுகாப்பு படைகள் கேட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.