ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:59 IST)

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி… மாநில அரசு அறிவிப்பு!

கர்நாடகாவில் ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு பின் ஐம்பது சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவிதம் இருக்கைகளை மட்டுமே நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.