செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (12:40 IST)

ஹைதராபாத் பிரியாணி ஒன்னு பார்சல்…! எல்லை மீறி போறீங்க! – செமையா கலாய்த்த ராஜஸ்தான்!

சனிக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைஸர்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் ட்விட்டரில் இட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது.

முன்பெல்லாம் ஐபிஎல் பொட்டிகள் நடைபெற்றால் வெல்லும் அணி ரசிகர்கள் தோற்கும் அணியை கலாய்ப்பது வழக்கமாக இருந்து வந்தது. தற்போது சம்பந்தப்பட்ட அணிகளே தங்களது ட்விட்டர் மூலமாக மறைமுகமாக எதிரணியை கலாய்ப்பது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

கடந்த சனிக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் வார்னட் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் இரண்டாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் கிட்டத்தட்ட தோற்று விட்ட நிலையில் கடைசி பந்தில் தெவாட்டியா அடித்த சிக்ஸரால் ராஜஸ்தான் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் தோல்வியடைந்த ஹைதராபாத்தை கிண்டல் செய்யும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் “எங்களுக்கு அதிகளவிலான ஹைதராபாத் பிரியாணி இப்போது தேவைப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.