தொடர்புடைய செய்திகள்
- கொரோனா குமார் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸைத் தர தேவையில்லை… சிம்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம்!
- சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் கதாநாயகி ஆகும் அனுஷ்கா!
- கொரோனாவை காட்டிலும் ‘நிபா' மிகவும் ஆபத்தானது: மீண்டும் ஊரடங்கா?
- லூசிபர் 2 படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம்!
- ஜெண்ட்ல்மேன் 2 படத்தில் இணையும் மற்றொரு கதாநாயகி!
“பிரான்ச்சைஸ் கிரிக்கெட்டில் கிடைக்கும் பணத்துக்காகதான் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” – டிகாக் ஓபன் டாக்!
தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்ட்டன் டிகாக். அந்த அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இப்போது அந்த அணியின் பேட்டிங் நம்பிக்கையாக உள்ளார் டிகாக்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த டிகாக் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். விரைவில் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். இந்த தொடருக்குப் பிறகு அவர் ஒருநாள் தொடரில் இருந்தும் ஒய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்து பேசியுள்ள டிகாக் “நான் கடந்த 11 ஆண்டுகளாக அணிக்கு உண்மையாக விளையாடியுள்ளேன். பிரான்ச்சைஸ் டி 20 கிரிக்கெட்களில் கிடைக்கும் பணத்துக்காகதான் நான் இப்போது ஓய்வை அறிவித்துள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எந்தவொரு சாதாரண மனிதனும் செய்ய நினைக்கும் செயல் இதுதான்.” எனக் கூறியுள்ளார்.