திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2023 (14:37 IST)

ஜெண்ட்ல்மேன் 2 படத்தில் இணையும் மற்றொரு கதாநாயகி!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமாகும். மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் அப்போதைய காலத்திலேயே பெரும் வெற்றி பெற்றது. புதுமுக இயக்குனர் ஷங்கரை நம்பி அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்தார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

நீண்டகாலமாக படத்தயாரிப்புகளில் ஈடுபடாத அவர் , தற்போது ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் அறிவித்தார். இதற்காக தற்போது “ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்  மூலமாக தயாரிக்க உள்ளார்.

இப்போது முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க இந்தி நடிகை பிராச்சி தெஹ்லான் இணைந்துள்ளார். ஏற்கனவே படத்தில் நடிகை நயன்தாரா சக்ரவர்த்தி ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.