தொடர்புடைய செய்திகள்
- ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழிசை
- பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம், ஆனால் செய்யமாட்டார்கள்: ப.சிதம்பரம் சாடல்!
- ஸ்டெர்லைட் துயர சம்பவம்: கண்டனம் தெரிவித்த திரையுலக பிரபலங்கள்
- வெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்?
- அமித்ஷாவிற்கே சவால் விடும் தம்பித்துரை - பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தியா?
கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்றுக்கொண்டதோடு, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தனது டிவிட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பிறகு குறிப்பிட்டிருந்த அவர் நீங்களும் இவாறு உடல்களை கட்டுக்கோபாக வைத்திருக்க வீடியோவை வெளியிடுங்கள், மேலும் இதே போல் ஃபிட்னஸ் சேலஞ்சை செய்து வீடியோ வெளியிடும்படி உங்களது நண்பர்களுக்கு சவால் விடுங்கள். நான் இப்பொழுது விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோருக்கு இந்த சவாலை விடுக்கிறேன் என கூறியிருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட கோலி, தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு தனது டாஸ்கை முடித்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் தனது மனைவி அனுஷ்கா ஷர்மா, பிரதமர் மோடி, கேப்டன் டோனி ஆகியோரை இந்த ஃபிட்னஸ் சேலஞ்சை செய்யும்படி கூறியிருந்தார்.
இந்நிலையில் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்டேன், நான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்