வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 23 மே 2018 (19:21 IST)

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம், ஆனால் செய்யமாட்டார்கள்: ப.சிதம்பரம் சாடல்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், பெட்ரோல் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. 
 
கர்நாடக தேர்தல் முடிந்ததில் இருந்து, கடந்த 9 நாட்களாகத் தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வண்ணம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர். 
 
இதற்கிடையே அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையில் அதிகபட்சமாக 25 ரூபாய் வரை குறைக்க முடியும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
ஆனால், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு இதை செய்யமாட்டார்கள். பெட்ரோலில் லிட்டருக்கு ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் என பெயரளவுக்கு குறைத்து மக்களை ஏமாற்றுவார்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார்.