திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By CM
Last Updated : திங்கள், 21 மே 2018 (19:21 IST)

வெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்?

வெத்து ஸீன் போடுகிறாரா விரல்வித்தை நடிகர் என எல்லோர் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.
 
திறமைகள் பல இருந்தாலும், தன் வாயாலேயே எல்லாவற்றையும் கெடுத்துக் கொள்பவர் என்ற பெருமை விரல்வித்தை நடிகருக்கு உண்டு. அவர் என்னதான் பேசினாலும், எப்படித்தான் நடந்து கொண்டாலும்… அவரைக் கொண்டாட இன்னமும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காத்துக் கிடக்கிறது. காரணம், அவர் திறமை மீது கொண்ட மதிப்பு.
 
அவருடைய கடைசி படம் பயங்கர பிளாப் ஆனபோது, ‘அவ்வளவு தான் அவருடைய சினிமா வாழ்க்கை’ என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், மிகப்பெரிய இயக்குநர் இயக்கும் மல்ட்டி ஸ்டாரர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அந்த வாய்ப்பைப் பிடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆவார் என்று பார்த்தால், வழக்கம்போல் தேவையில்லாத பில்டப்புகளை தன் அடிப்பொடிகள் மூலமாகச் செய்து வருகிறார் விரல்வித்தை நடிகர். இதைப் பார்க்கும்போது, வெத்து ஸீன் போடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.