திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (09:07 IST)

பதட்டத்தில் இருந்த பதிரனா.. பக்கத்தில் வந்து பேசிய தோனி.. அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள்! – என்ன சொன்னார் தோனி?

Pathirana Dhoni
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வென்ற நிலையில் ப்ளேயர் ஆப் தி மேட்ச் வென்ற பதிரனா தான் விக்கெட் வீழ்த்தியது குறித்து பேசியுள்ளார்.



ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே போட்டி நடந்தது. ரசிகர்களால் எல் க்ளாசிக்கோ என வர்ணிக்கப்படும் இந்த போட்டி சிஎஸ்கே அணி வீரராக தோனிக்கு 250வது போட்டியும் கூட.

இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்களை குவித்து 207 ரன்களை மும்பை இந்தியன்ஸுக்கு டார்கெட் வைத்தது. ஆனால் சிஎஸ்கேவின் அபாரமான பந்துவீச்சில் தடுமாறிய மும்பை அணி 186 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் மதிஷா பதிரனா வீழ்த்திய 4 விக்கெட்டுகள் வெற்றிக்கு உதவியதால் அவர் ஆட்டநாயகனாக தேர்வானார்.


இந்த போட்டியில் பவர் பிளேக்கு பிறகான ஓவர் போட வந்த பதிரனா பதற்றத்துடன் இருந்தார். மேலும் வைட் பால்களையும் போட்டார். அப்போது தோனி அவர் பக்கத்தில் சென்று அவரிடம் ஏதோ பேசிவிட்டு சென்றார். அதற்கு பிறகு சிஏஅப்பாக விளையாடிய பதிரனா இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தூக்கினார். தோனி அவரிடன் என்ன சொன்னார் என ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில் அது என்ன என்பதை பதிரனாவே சொல்லியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “நாங்கள் பவர் ப்ளேவில் பந்து வீசும்போது நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். ஆனால் அப்போது தோனி பாய் அமைதியாக விளையாடு என்று என்னை அமைதிப்படுத்தினார். எனக்கு அது தன்னம்பிக்கையை கொடுத்தது. நான் முடிவைப்பற்றி கவலைப்படாமல் எனது திட்டத்தில் கவனம் செலுத்தினேன். அதற்கான பரிசு கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K