வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (13:25 IST)

உலகக்கோப்பை டி20 அரையிறுதி: டாஸ் வென்ற நியூசிலாந்தின் அதிரடி முடிவு!

pak vs nz
உலகக்கோப்பை டி20 அரையிறுதி: டாஸ் வென்ற நியூசிலாந்தின் அதிரடி முடிவு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது அரையிறுதி போட்டி நடைபெறுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்தநிலையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. இதனை அடுத்து அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களத்தில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது
 
இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியில் இன்று விளையாடும் வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்
 
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம், முகமது ஹரிஸ், ஷான் மசூத், இப்டிகர் அகமது, சதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், நீஷம் ஷா, ஹரிஸ் ரப், ஷாஹின் அப்ரிடி,
 
நியூசிலாந்து: பின் அலென், கான்வே, வில்லியம்சன், கிளன் பிலிப்ஸ், டாரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னர், டிம் செளதி, இஷ் சோதி, ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்,
 
Edited by Mahendran