திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:49 IST)

உலகக் கோப்பைல மழை விளையாடிடுமோ…? பாதிக்கப்பட்ட பயிற்சி ஆட்டங்கள்!

அக்டோபர் 5 ஆம் தேதி முதல் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு அனைத்து அணிகளும் வந்து சேர்ந்து இப்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த பயிற்சி ஆட்டங்களில் மூன்று போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

அதே போல நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டது. மற்றொரு போட்டியான பங்களாதேஷ் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியும் மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடந்தது.

இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். அதனால் உலகக் கோப்பை போட்டிகள் மழையால் பாதிக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.