தொடர்புடைய செய்திகள்
- சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!
- இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?
- சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!
- ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!
- இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படுவாரா ஹசீனா? இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக முடிவு?
8 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியது.
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து “இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்றால் நாங்கள் இந்த தொடரை நடத்துவதைக் கைவிடுகிறோம்” என அறிவித்துள்ளது. இதனால் ஐசிசி தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றும் ஆலோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அப்படி வேறு நாட்டுக்கு மாற்றினால் தாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடக்குமா? அதில் பாகிஸ்தான் கலந்துகொள்ளுமா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்