1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2023 (07:15 IST)

ஆசியக் கோப்பை: பங்களாதேஷை வீழ்த்திய பாகிஸ்தான்!

ஆசியக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் ஷகீப் உல் ஹசன் மற்றும் முஷ்புகீர் ரஹ்மான் ஆகியோர் மட்டும் சிறப்பாக அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற 193 ரன்களில் ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 40 ஆவது ஓவரில் 194 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இனாம் உல் ஹக் அதிகபட்சமாக 78 ரன்கள் சேர்த்தார். 4 விக்கெட்கள் வீழ்த்திய ஹாரிஸ் ரவுஃப் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.