ஜனவரி 23 ஆம் தேதி கேஎல். ராகுல்- அதியா ஷெட்டிக்கு திருமணம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல்- அதியா ஷெட்டியின் திருமணம் வரும் 23 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல்.ராகுல். இவர் இதுவரை இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளிலும், 45 ஒரு நாள் தொடரிலும், 72 –டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இவர், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகன் அதியா ஷெட்டியை காதலித்து, டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதை சமீபத்தில் சுனில் ஷெட்டியே உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், கே.எல். ராகுல் – அதியா ஷெட்டியின் திருமணம் ஜனவரி மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி கே.எல். ராகுலுக்கும் அவரது காதலியும் நடிகையுமான அதியா ஷெட்டிக்கும் திருமணம் நடக்கவுள்ளது.
பாந்த்ராவின் பாலி ஹில்ஸில் உள்ள ரிலி ராகுலின் இல்லத்தில் இரு குடும்பங்களுடன் இத்திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக வீட்டில் தொங்கு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.