திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (08:48 IST)

கே எல் ராகுலிடம் இந்த பிரச்சனை இருக்கிறது…. முகமது அசாரூதின் அறிவுரை!

இந்திய அணிக்கு எதிர்காலத்தில் கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல் மோசமான ஆட்டத்திறன் காரணமாக அவரிடம் இருந்த துணைக் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் முக்கியத்துவமும் அணியில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கே எல் ராகுலின் ஃபார்ம் குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் அசாரூதின் அவருக்கு அறிவுரை வழங்கும் விதமாக பேசியுள்ளார். அதில் “கே எல் ராகுல் திறமையான வீரர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவர் தொடர்ந்து சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் தினறுகிறார். ஆனால் அவரால் அதை சரிசெய்துகொள்ள முடியும். பந்தை எங்கு அடிக்க வேண்டும் என்பதில் அவர் சில தவறான முடிவுகளை எடுத்து வருகிறார்” எனக் கூறியுள்ளார்.