ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (13:36 IST)

இதுவும் ஒரு வீரமரணம்தான்: கமல்ஹாசன் இரங்கல்

kamal
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்பி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுவும் ஒரு வீரமரணம்தான் என தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் எம்பி சந்தோஷ் சிங் செளத்ரி என்பவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் இன்று கலந்து கொண்டார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததை அடுத்து ஆம்புலன்ஸில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
 
இது குறித்து கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது மறைந்த ஜலந்தர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் சிங் செளத்ரி அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவும் ஒரு வீரமரணம்தான். நீங்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவீர்கள்’ என தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran