செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (12:12 IST)

நியூசிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து வில்லியம்சன் விலகல்: புதிய கேப்டன் யார்?

williamson
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து வில்லியம்சன் விலகிவிட்டதாக வெளி வந்துள்ள தகவலை அடுத்து புதிய கேப்டன் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
நியூசிலாந்து அணியின் கேப்டனாக கடந்த சில ஆண்டுகளாக வில்லியம்சன் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
 
கேப்டன் பொறுப்பில் இருந்து விலக இது சரியான நேரம் என்று நினைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டு உச்சநிலை என்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் போது பல சவால்களை நான் சந்தித்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் விலகியதையடுத்து புதிய கேப்டனாக சவுதி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்றும் இனிமேல் அவர்தான் நியூசிலாந்து அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran