வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2023 (18:15 IST)

அரையிறுதி இன்று உறுதி..! நியூஸி அடியில் வெலவெலத்து போன இலங்கை! – 172 மட்டுமே இலக்கு!

Rachin Ravindra
இன்று நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் இலங்கையை 171 ரன்களில் மடக்கியுள்ளது நியூசிலாந்து.



இன்று நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்திற்கு அரையிறுதி வாய்ப்புகள் பிரகாசமாகும் என்பதால் நியூசிலாந்து இந்த போட்டியை வெல்வதில் முனைப்பு காட்டி வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து இலங்கையின் விக்கெட்டுகளை பதம் பார்த்தது. குசால் பெரேரா மட்டுமே 51 ரன்களை அடித்தார். மற்றவர்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியதால் 46வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

அதை தொடர்ந்து 172 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து 4 ஓவர்களிலேயே 20 ரன்களை தாண்டியுள்ளது. இதே நிலை நீடித்தால் குறைந்த ஓவர்களிலேயெ டார்கெட்டை முடித்து நியூசி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K