செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (16:23 IST)

வங்கதேசத்துடன் மோதல்.. இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இல்லை என்ற நிலையில்  இன்றைய போட்டி சுவாரஸ்யம் இல்லாத ஒரு போட்டியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் தற்போது இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி சற்றுமுன் வரை 31 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இலங்கை அரசு கலைத்துள்ள நிலையில் இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல் வங்கதேசமும் இதுவரை  7 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran