வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (09:34 IST)

கோலி விக்கெட் எனக்குதான்! – சொல்லி வைத்து களம் இறங்கும் பவுலர்!

இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதுதான் எனது இலக்கு என நியூஸிலாந்து பவுலர் ட்ரெண்ட் பவுல்ட் கூறியுள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த நியூஸிலாந்து வீரர் ட்ரெண்ட் பவுல்ட் இந்தியாவுக்கு எதிரான நியூஸிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அணியில் இணைந்துள்ள ட்ரெண்ட் ”இந்த ஆட்டத்தில் கோலியை வீழ்த்துவதுதான் எனது இலக்கு. அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விராட் கோலி எவ்வளவு சிறந்தவர் என்பதை நாங்கள் அறிவோம். இந்திய வீரர்கள் பலர் தரவரிசையில் முன்னணியில் உள்ளனர். அவர்களோடு விளையாடுவதால் எங்கள் திறன் அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.