வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (12:02 IST)

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா

ISPL T10 கிரிக்கெட் லீக் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ள இருக்கும் அணியின் அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னை அணியின் உரிமையை பெற்றுள்ளதாக நடிகர் சூர்யா சற்று முன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.  ஏற்கனவே ISPL T10 கிரிக்கெட் லீக் தொடரில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் ராம்சரண் தேஜா என்றும் மும்பை அணை உரிமையாளர் அமிதாபச்சன் என்றும் ஸ்ரீநகர் அணியின் உரிமையாளர் அக்ஷய குமார் என்றும் பெங்களூர் அணியின் உரிமையாளர் ஹிருத்திக் ரோஷன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை அணியின் உரிமையாளர் சூர்யா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ள சூர்யா, சென்னை அணியின் உரிமையை பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும்  அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்கள் சிறந்து விளங்கும் ஒரு அணியை உருவாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.  
 
இந்த நிலையில் சென்னை அணியின் உரிமையாளரான சூர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran