1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2021 (17:07 IST)

இந்தியர்களை குறைத்து மதிப்பிட மாட்டோம்: தோற்ற பின் பாடம் கற்ற ஆஸி.!!

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இந்தியர்களை குறைத்து மதிப்பிட மாட்டோம் என தெரிவித்துள்ளார். 

 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிகளில் 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா கோப்பையை கைப்பற்றியது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இத்தனைக்கும் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் ரஹானே போன்ற புதியவரின் தலைமையில் இந்திய அணி இதை சாதித்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இந்தியர்களை குறைத்து மதிப்பிட மாட்டோம். மொத்தமாக 1.5 பில்லியன் இந்தியர்கள் உள்ளனர். அதில் முதல் 11 பேரிடம் விளையாடுவது கடினம் என தெரிவித்துள்ளார்.