தொடர்புடைய செய்திகள்
- 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவர்தான் கேப்டன்… வெளியான தகவல்!
- 'பாலியல் வன்புணர்வு செய்தி வந்தால் சேனலை மாற்றிவிடுவோம்' - சவாலாக இருக்கிறதா ஆண் குழந்தை வளர்ப்பு?
- கேப்டன்சி சர்ச்சையால் ரோஹித்தும் ஹர்திக்கும் பேசிக்கொள்ளவேயில்லை… பத்திரிக்கையாளர் பகிர்ந்த தகவல்!
- டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது இடத்தை உறுதி செய்யவேண்டும்… சூர்யகுமார் ஆசை!
- ஹர்திக் நடாஷா உறவு முறிவிற்கு என்ன காரணம்?... குடும்ப நண்பர் பகிர்ந்த தகவல்!
விவாகரத்துக்குப் பின்னரும் பாண்ட்யாவை சீண்டும் நடாஷா…!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், செர்பியா நாட்டைச் சேர்ந்த நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் சில மாதங்களுக்கு முன்னர் விரிசல் எழுந்தது. ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை அறிவித்தனர். இப்போது நடாஷா தனது மகனோடு செர்பியாவுக்கே திரும்பி சென்றுவிட்டார்.
இந்நிலையில் இந்த விவாகரத்துக்கு ஹர்திக்தான் காரணம் என்று சமீபமாக அதிகளவில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடாஷா சமீபத்தில் இன்ஸ்டாவில் “திருமண உறவில் ஆண், தன் துணையை ஏமாற்றுவது” குறித்த வீடியோ ஒன்றை லைக் செய்ய அது கண்கொத்திப் பாம்பாக காத்திருந்த ரசிகர்களுக்கு அல்வா கிடைத்தது போல அமைந்துள்ளது. இந்த வீடியோவை அவர் லைக் செய்ததின் மூலம் ஹர்திக் திருமண உறவில் நேர்மையாக இருக்கவில்லை என்பதை நடாஷா வெளிப்படுத்தியுள்ளார் என்று கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.