திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:00 IST)

மீண்டும் பழைய நடராஜனாக வர விரும்புகிறேன்… நம்பிக்கையோடு உழைக்கும் நட்டு!

இந்திய அணியில் இடம் கிடைத்து சில போட்டிகளில் விளையாடி கவனம் பெற்ற நடராஜன் பின்னர் காயம் காரணமாக உட்கார வைக்கப்பட்டார்.

இந்திய அணிக்காக சில போட்டிகளே விளையாடி இருந்தாலும் தமிழக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த வீரராக இருந்தார் நடராஜன். ஐபிஎல் மூலம் கிடைத்த வெளிச்சத்தில் இந்திய அணிக்குள் நுழைந்த அவர் சிறப்பாக செயல்பட்ட போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவருக்கு தமிழக அணியிலும் வாய்ப்பில்லை எனும் சூழல் உள்ளது. சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெறாத நிலையில் விரைவில் நடக்க உள்ள ரஞ்சி கோப்பைக்கான அணியில் தமிழகத்துக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்குள் மீண்டும் திரும்புவது குறித்து பேசியுள்ள அவர் ‘ஐபிஎல் பற்றி இப்போது அதிகம் யோசிக்கவில்லை. உலகக்கோப்பை தொடரும் வருவதால் மிகப்பெரிய ஆண்டாக இருக்கும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வருவதால் பதற்றம் கொஞ்சம் இருக்கதான் செய்கிறது. மக்கள் என்னிடம் வலுவான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்கள். மீண்டும் பழைய நடராஜனாக வர விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.