வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 7 மே 2024 (08:43 IST)

“உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது என் கையில் இல்லை”- நடராஜன் கருத்து!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் பிரகாசித்து பின்னர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதற்கு அவரின் காயமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இப்போது மீண்டு வந்துள்ளார். தற்போது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இப்போது நடக்கும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக இருந்தும் அவர் டி 20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நடராஜன் “நான் உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவது என் கையில் இல்லை. இந்திய அணியில் இடம்பெறுவது எனக்கு ஒரு சாதனைதான். சிறப்பாக விளையாடி SRH அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும். உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது என்னை பாதிக்கவில்லை. என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும்” எனக் கூறியுள்ளார்.