தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!
- யுவ்ராஜ் கொடுத்த ஜெர்ஸியை குப்பைத் தொட்டியில் போட்டார் பிராட்… தந்தை பகிர்ந்த தகவல்!
- “நீ 15 முறை டக் அவுட் ஆனாலும் வாய்ப்புத் தருவேன்..” கேப்டன் குறித்து அபிஷேக் நெகிழ்ச்சி!
- ஐசிசி தரவரிசையில் யாரும் தொடாத உச்சம்… அபிஷேக் ஷர்மா படைத்த சாதனை!
- என்னை அவமதித்து அழவைத்து விட்டனர்… பஞ்சாப் அணி மேல் குற்றச்சாட்டு வைத்த கெய்ல்!
அர்ஜுன் டெண்டுல்கரை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் ஆர்வம்.. !
இந்தியக் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அப்பாவின் வழியில் கிரிக்கெட்டைத் தேர்வு செய்து ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் இதுவரை எந்த சீசனிலும் அவருக்கு முழுமையாக விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. அதே போல விளையாடிய போட்டிகளிலும் கூட அவர் முழுமையாக 4 ஓவர்கள் பந்துவீசவே இல்லை.
இதனால் கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அர்ஜுன் டெண்டுல்கர் போராடி வருகிறார். இதற்காக உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை டிரேட் செய்ய முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவரை 2 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ஷர்துல் தாக்கூரைப் பெற்றுக்கொண்டு டிரேட் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக அணிகளுக்குள் டிரேடிங் பேச்சுவார்த்தைகள் அதிகளவில் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.