திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (11:32 IST)

ஊடகங்களில் வரும் மதுவிற்பனை தொகை உண்மையானது அல்ல: செந்தில் பாலாஜி

Senthil
தீபாவளிக்கு முந்தைய இரண்டு நாட்கள் மற்றும் தீபாவளி தினத்தில் டாஸ்மாக் மது வகைகள் விற்பனை செய்த தொகை குறித்த தகவல் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தீபாவளி மது விற்பனை நிலவரம் குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் எங்கள் நிர்வாகத்திற்கே இன்னும் முழு விவரங்கள் கிடைக்காத நிலையில் ஊடகங்கள் எவ்வாறு செய்தி வெளியிடுகின்றன என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
கடந்த 3 நாட்களில் 708 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் மது விற்பனையை நடந்துள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் 244 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran