திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (16:48 IST)

மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2,63,610 பயணிகள் பயணம்- மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில்களில் தீபாவளி பண்டிகையொட்டி ஒரே நாளில் 2 லட்சத்திற்மும் அதிகமானோர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மா நகரத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி, கடந்த 21 ஆம் தேதியன்று,  மெட்ரோ  2,63,610 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் கூறப்படும் நிலையில், கடந்த 3-01-22 ஆம் தேதி 1,35,977 பயணிகளும், 26-0-22 அன்று 1,91,720 பயணிகளும், 3-06-22 அன்று 2,02,456 பயணிகளும் , ஆகஸ்ட் 29 ஆம் தேதி 2,220,898 பயணிகளும், 30-09-22 அன்று 2,46,404 பயணிகளும்  பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.

Edited by Sinoj