1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (12:22 IST)

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக இருந்து வரும் தோனி தனது வெற்றிக்கு பயம்தான் காரணம் என கூறியுள்ளார்.



இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி தற்போது அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு கோப்பை வெல்ல சென்னை அணி கடும் முயற்சிகள் எடுத்த நிலையில் நூல் இழையில் ப்ளே ஆப் வாய்ப்பை தவறவிட்டது.

எனினும் பல போட்டிகளில் கடைசி ஓவர்களில் தோனி இறங்கி அடித்த சிக்ஸர்கள் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்டார் ப்ளேயர்கள் இல்லாவிட்டாலும் அணியை ஒரு ஒழுக்கத்துடன் வழிநடத்தும் தோனியின் பாங்கு பலராலும் பெரிதும் புகழப்படுகிறது. இந்நிலையில் தனது வெற்றியின் ரகசியம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் தோனி.


அதில் அவர் “பயம் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. எப்போது உங்களுக்கு அந்த பயம் இருக்க வேண்டும். எனக்கு பயம் இல்லாமல் இருந்தால் நான் ஒருபோதும் தைரியமாக இருக்க முடியாது. என்னை பொறுத்தவரை பயமும், அழுத்தமும் தான் எனக்கு மிகவும் முக்கியமானது. அவைதான் எல்லாவற்றையும் யோசிக்க வைத்து சரியான முடிவுகளை எடுக்க எனக்கு பெரிதும் உதவுகிறது” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K