திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (12:07 IST)

ராஜா சார் இங்க பாருங்க.. குணா பாடலை பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்! – டேக் செய்து கோர்த்துவிடும் நெட்டிசன்கள்!

Rajasthan Royals
இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இடையேயான குவாலிஃபயர் போட்டி சென்னையில் நடைபெறும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.



ஐபிஎல் போட்டியில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் குவாலிபயர் போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதில் கொல்கத்தா அணி ராஜஸ்தானை வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குவாலிபயர் 2வில் மோதிக் கொள்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இன்றைய போட்டிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் சென்னை வருகை தந்துள்ளனர்.


ராஜஸ்தான் வீரர்கள் சென்னை வந்ததை சிறப்பிக்கும் விதமாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குணா படத்தில் இடம்பெறும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை பயன்படுத்தி எடிட் செய்துள்ளனர். சமீபத்தில்தான் அந்த பாடலை மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தியதற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்த பாடலை பயன்படுத்தியுள்ளதால் சிலர் இளையராஜாவை அந்த வீடியோவின் கமெண்ட்டில் டெக் செய்து வருகின்றனர்.

Edit by Prasanth.K