திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (18:02 IST)

C க்ரேட்டில் ஆச்சு தோனிக்கு இடம் உண்டா? பிசிசிஐ ரூல்ஸ் கூறுவது என்ன?

தோனிக்கு இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ விதி கூறுகிறது. 
 
பிசிசிஐ அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வருடாந்திர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  
 
கடந்த சில மாதங்களாகவே இந்திய அணியில் இடம்பிடிக்காத தோனி ஒப்பந்த பட்டியலிலும் இடம்பெறாததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவே பேசப்படுகிறது. ஆனால், தோனிக்கு இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ விதி கூறுகிறது. 
 
ஆம், பட்டியலில் இல்லாத வீரர்களும் அணிக்காக விளையாட முடியும். அப்படி ஆடும் பட்சத்தில் முதல் இரண்டு போட்டிகள் குறிபிட்ட சம்பளத்தில் விளையாட வேண்டும். அதன் பின்னர் சி க்ரேட் வழங்கப்படும் என பிசிசிஐ விதியில் கூறப்பட்டுள்ளது.