பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் தோனி மிஸ்ஸிங்: ரசிகர்கள் ஷாக்!!

dhoni
Sugapriya Prakash| Last Modified வியாழன், 16 ஜனவரி 2020 (15:24 IST)
பிசிசியின் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனி இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிசிசிஐ அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வருடாந்திர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
பிசிசிஐ ஒப்பந்தத்தின் படி, A+ கிரெட் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  A கிரேட் பட்டியலில் அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், புஜாரா, ரஜானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப், ரிசப் பண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
B கிரேட் பட்டியலில் சஹா, உமேஷ் யாதவ், சாஹால், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், C கிரேட் பட்டியலில் கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், மணீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, சர்துல் தாகூர், ஸ்ரேயஸ் ஐயர், வாசிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :