செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 மே 2023 (08:39 IST)

கொல காண்டுல இருக்கேன்.. நெருப்புடா நெருங்குடா! – ’தல’ தோனி எண்ட்ரி பாடலில் அதிர்ந்த மைதானம்!

MS Dhoni
நேற்றைய ஐபிஎல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் தோனி மைதானத்திற்குள் நுழைந்தபோது ஒலித்த பாடல் வைரலாகியுள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 172 ரன்களை குவித்திருந்த நிலையில், இரண்டாவதாக களமிறங்கிய குஜராத் அணியை ஃபீல்டிங்கில் வெகுவாக கட்டுப்படுத்தியது.

இதனால் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்த போட்டியில் தோனியின் சிக்ஸர் ஷாட்டுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோஹித் ஷர்மா வீசிய பந்தில் ஹர்திக் பாண்ட்யா கேட்ச் பிடித்ததால் அவுட் ஆனார்.

ஆனாலும் ‘சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்’ என்ற லெவலில் அவருக்கான மவுசு என்றும் குறையவில்லை. தோனி மைதானத்திற்குள் நுழைந்தபோது “கொல காண்டுல இருக்கேன்.. கொல்லாம விட மாட்டேன்” என்ற டயலாக்குடன் ஒலித்த “நெருப்புடா நெருங்குடா” பாடல் மைதானம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. முன்னதாக தோனி எண்ட்ரியின் போது ஒலித்த படையப்பா, பாட்ஷா பாடல்களும் பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K