திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (15:58 IST)

தலித்துகள் முதலமைச்சராக முடியாது.! திருமாவளவனின் கருத்துக்கு சீமான் - கார்த்தி சிதம்பரம் ஆதரவு..!!

Seeman
ஒரு தலித் எப்போதுமே முதலமைச்சர் ஆக முடியாது என்ற திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளனர்.
 
உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன்,  உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்தார். 

இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்ப பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும் போகும் என்றும் ஆனால் எந்த காலத்திலும் ஒரு தலீத்தை முதலமைச்சர் ஆக முடியாது என்றும் திருமாவளவன் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆனால் திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற திருமாவளவனின் கருத்தை எதிர்க்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.

Seeman
கார்த்தி சிதம்பரம் ஆதரவு:
 
தலித்துகள் முதலமைச்சராக வர முடியாது என்ற திருமாவளனின் கருத்தை ஏற்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமுதாய சூழல் அவ்வாறு உள்ளது என்றும் தமிழகத்திலும் அதே நிலைதான் நீடிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


தலித் தலைமையை ஏற்பதில் பல மாநிலங்களில் தயக்கம் காட்டுகிறார்கள் என்று கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்