செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 3 மே 2023 (17:02 IST)

பாலியல் தொழிலாளிகளுடன் முகமது ஷமிக்கு கள்ள உறவு- மனைவி புகார்

தன் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், பாலியல் தொழிலாளிகளுடன் கள்ள உறவு வைத்திருந்ததாகவும் அவரது மனைவி புகாரளித்துள்ளர்.

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் சில ஆண்டுகளுக்கு முன் ஹசின் ஜகான் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு முகமது ஷமி மீதும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு புகாரளித்தார். அதில், முகமது ஷமியின் சமூத்த சகோதரர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், கொலை முயற்சி செய்ததாகவும், பல பெண்களிடம் முகமது ஷமிக்கு தொடர்புள்ளதாகவும், தன்னிடம் வரதட்சணைகேட்டு துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார்.

இப்புகார்களுக்கு இந்திய வீரர் முகமது ஷமி மறுப்பு கூறினார். இதையடுஹ்ட்து முகமது ஷமி-ஹசின் ஜகான் விவாகரத்து கோரி கொல்கத்தா குடும்ப  நல நீதிமன்றத்தில்  2018 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் தன்னை பிரிந்திருக்கும் கணவன் ஷமி ஜீவனாம்சம் தர வேண்டுமென்றும், சக வீரர்களுடன் பயணம் மேற்கொள்ளும்போது, அவர்  இந்த உறவில் தொடர்வதாகவும் அவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்தார். இதையேற்ற நீதிமன்றம் பிரிந்த மனைவி ஹசின் ஜகானுக்கு மாதம் ரூ. 1.30 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த ஜீவனாம்சம் தனக்கு திருப்திகரமாக இல்லையென்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.,