தொடர்புடைய செய்திகள்
- பொங்கல் பை அளித்த அமைச்சருக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!
- 10 நாளில் 4 லட்சம் கோழிகள் இறப்பு… பறவைக் காய்ச்சலா என சோதனை!
- குடியால் தனது கேரியரை இழந்தாரா? ரசிகரின் கமெண்ட்டால் கடுப்பான மாதவன்!
- சிம்பு படத்தில் தனுஷின் மகன் – பத்து தல அப்டேட்!
- கடற்கரையில் சாகசம் செய்யும் அமலா பால் - ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய புகைப்படம்!
கொரோனா ஹாட்ஸ்பாட் மெல்போர்ன் மைதானம் – போட்டியை பார்த்தவருக்கு கொரோனா!
மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பார்த்த ரசிகர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி நடந்த பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியைப் பார்த்த ரசிகர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இது சம்மந்தமாக அந்த நாட்டு நாளேடான தெ டெய்லிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
போட்டியின் இரண்டாம் நாள் பார்வையாளராக இருந்த 30 வயதுமதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் போட்டிக்கு பின்னர் வணிக மையம் ஒன்றுக்கும் சென்றுள்ளார். அதனால் எங்கு அவருக்கு தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக மெல்போர்ன் மைதானத்தின் தி கிரேட் சதர்ன் ஸ்டான்ட்டில் ஜோன் 5-ல் 12.30 மணிமுதல் பிற்பகல் 3.30 வரை போட்டியைப் பார்த்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்